கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4ல் 3 வழக்குகளில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக ஏற்கனவே 14 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருக்கும் லாலு பிரசாத், உடல்நலக் குறைவு காணமாக ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
இந்நிலையில் தோரந்தா கருவூலத்தில் இருந்து ரூ.139 கோடி ஊழல் செய்த வழக்கு தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி நடைபெற்றது. அப்போது தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, இன்று ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் தோரந்தா கருவூல வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், லாலு பிரசாத் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லாலுவுக்கான தண்டனை விவரங்கள் வரும் 18-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்.. திருப்பதியில் இன்று முதல் 15 ஆயிரம் நேரடி இலவச தரிசன டிக்கெட் வினியோகம்