நகர்புற உள்ளாட்சி தேர்தலின் பரப்புரை நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் சுயட்சை வேட்பாளர்கள் என பல முனை போட்டி இருந்து வருகிறது.
வேட்பாளர்கள் வீடு வீடாக் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். வித்யாசமான முறையில் வாக்காளர்களிடம் பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நாளை மறுநாள் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் மும்மரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அதிகாலையில் இருந்து பிரச்சாரம் தொடங்கும் நிலையில் இரவு 10 மணி வரை அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.