காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி காஞ்சிபுரம் வணிகர் வீதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் முதலாக நடக்கும் தேர்தலில், உறுதியாக மேயராக பா.ம.கவை சேர்ந்தவர் வருவார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் மேயராக பா.ம.க. வெற்றி பெற்றவுடன், போடும் முதல் கையெழுத்து டாஸ்மாக் இல்லாத நகரமாக மாற்றுவது ஆகும். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.
முதல்-அமைச்சர் ஸ்டாலின் நீட் வர அ.தி.மு.க. தான் காரணம் என்று என்கிறார். ஆனால் அ.தி.மு.க. நீட் வர தி.மு.க. தான் காரணம் மாறி, மாறி குறை கூறுகின்றனர். இருவரும் பொது இடத்தில் விவாதம் நடத்த தயார் என்று மாறி மாறி கூறிக் கொள்கிறார்கள். அப்படி பொது விவாதம் நடந்தால் நானும் தயார். இன்று நீட் தேர்வு இருப்பதற்கு காரணம் காங்கிரஸ், தி.மு.க., பா.ஜ.க. , அ.தி.மு.க. என அனைவரும் தான்.
காஞ்சிபுரம் ஏரி மாவட்டம் என பெயர் பெற்ற நிலையில், தற்போது ஏரிகள் எங்கே என தேடவேண்டிய நிலையில் உள்ளது. போலி பட்டு கூட்டுறவு சங்கம் உருவாக்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகின்றனர்.
மதுவிலக்கு குறித்து தி.மு.க., அ.தி.மு.க. விவாதத்திற்கு தயாரா? காஞ்சிபுரம் மாநகராட்சியில் பா.ம.க. வெற்றி பெற்று மேயரானால், காஞ்சிபுரம் நகரில் எங்கும் டாஸ்மாக் இயங்க அனுமதி வழங்க மாட்டோம். இதற்கான தீர்மானத்தில் கையெழுத்திடுவதையே முதலில் மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்… வினாத்தாள் கசிந்த விவகாரம்- குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை