மார்ச் 18 முதல் இலவச கேஸ்: மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகின்றன. ஆனால், தற்போது ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி அவற்றின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை இருந்தாலும், கடந்த காலங்களை ஒப்பிடும் போது விலை மலை போல் ஏறியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், உங்கள் வீடுகளுக்கு மார்ச் 18ஆம் தேதி முதல்
இலவச கேஸ்
வந்து சேரும் என்று மத்திய உள்துறை அமைச்சர்
அமித் ஷா
தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் களை கட்டியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான
பாஜக
ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அக்கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. சமாஜ்வாதி பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தாலும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற அதிக வாய்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் திபியாபூர் அவுரியா என்ற இடத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹோலி பண்டிகை மார்ச் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக, மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசை நீங்கள் கொண்டு வந்தால், மார்ச் 18ஆம் தேதி முதல் உங்கள் வீடுகளுக்கு இலவச கேஸ் வந்து சேரும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பாஜக அரசின் வாக்குறுதிகளை சொல்லி வாக்கு சேகரித்தார்.

மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்யப்பட்டது என அகிலேஷ் யாதவ் கேட்கிறார். ஒருவர் மஞ்சள் கண்ணாடி அணிந்திருந்தால், பார்ப்பது அனைத்தும் மஞ்சளாகத்தான் தெரியும். சமாஜ்வாதி ஆட்சியில், உத்தரப்பிரதேசத்தில் துப்பாகிகளும், குண்டுகளும்தான் தயாரிக்கப்பட்டதாக அமித் ஷா அப்போது குற்றம் சாட்டினார்.

மேலும், தேர்தலில் சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடையும். 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.