உக்ரைன் எல்லையில் கடந்த சில நாள்களாகவே போர் பதற்றம் நிலவி வருகிறது. அதனால், இந்த விவகாரம் உலக அளவில் அனைவராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது முகநூல் பக்கத்தில் உக்ரைன் மீது ரஷ்யா மீது நாளை (பிப்.16) தாக்குதல் நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு எல்லைக்கு அருகில் ரஷ்ய ராணுவம் சுமார் ஒரு லட்சம் தரைப்படைகளையும், போர் தளவாடங்களையும் நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்யாவின் ராணுவ செயல்பாடுகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஷ்யா தங்கள் நாட்டின் மீது நாளை தாக்குதல் நடத்தக்கூடும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அதனால் இந்தியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, இஸ்ரேல், நெதர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகள் தங்கள் மக்களை உக்ரைனில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடங்கியிருக்கின்றன.
Also Read: உச்சத்தில் ரஷ்யா – உக்ரைன் விவகாரம்: அகதிகளை ஏற்க முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்திய போலந்து அரசு!