உக்ரைன் – ரஷ்யா மத்தியிலான போர் நெருக்கடியில் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய “எப்போதும் ஒரு வாய்ப்பு” இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறினார். இது சர்வதேச சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்!
கடந்த ஒரு வாரமாக இருந்த பதற்றமான சூழ்நிலையில் கணிசமான அளவில் சரிந்துள்ளது. இது முதவீட்டு சந்தைக்கும், முதலீட்டாளர்களுக்கும் சாதகமாக மாறியுள்ளது.

ராணுவ படைகள் வெளியேற்றம்
உக்ரைன் – ரஷ்யா எல்லையில் சில படைகள் மட்டும் வெளியேற்றப்பட்டு உள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வீடியோ வெளியிட்டு உள்ளதைத் தகவல் வெளியாகியுள்ளது. இதை நிரூபணம் செய்யும் வகையில் டிவிட்டரில் சிலர் வீடியோவை பதிவிட்டு உள்ளனர்.

ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ்
ரஷ்ய படை வெளியேற்ற அறிவிப்புகளுக்குப் பின்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜெர்மனி நாட்டின் அதிபரான ஓலாஃப் ஷோல்ஸ், ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். ஷோல்ஸின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது, மேற்கத்திய நாடுகள் ரஷ்யா உடனான பாதுகாப்புப் பிரச்சனைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளன, ஆனால் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால் பொருளாதாரத் தடைகளை வழங்கத் தயங்காது என்பது தான். அமெரிக்காவுடன் இணைந்து ஜெர்மனி உக்ரைன்-க்கு ஆதரவாக நிற்கிறது.

ஐரோப்பிய யூனியன்
மேலும் ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை பிரிவின் உயர் உறுப்பினரான ஜோசப் பொரெல் கூறுகையில் உக்ரைன் உடனான ரஷ்ய போரைத் தடுக்க அனைவரும் முழுமையாக உழைத்து வருகிறோம். ரஷ்ய பாதுகாப்புப் பிரச்சனைகள் பற்றி அனைத்து கண்ணோட்டத்திலும் விவாதிக்க ஐரோப்பிய யூனியன் தயாராக உள்ளது. ஆனால் ரஷ்யா உக்ரைன் இடையில் போர் மூண்டால் NordStream2 கட்டாயம் செயல்படாது எனத் தெரிவித்துள்ளார்.

போலந்து அமைச்சர் சந்திப்பு
ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான போரைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, போலந்தின் வெளியுறவு மந்திரி Zbigniew Rau இன்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்திக்க உள்ளார்.

உக்ரைன் கருத்து
ரஷ்யா தனது படைகளைத் திரும்பப் பெறுவதை நாங்கள் பார்க்கும்போது நம்புவோம் என்று உக்ரைன் கூறியுள்ளது. உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்யா நாடுகளின் பகிரப்பட்ட எல்லையில் இருந்து மீதமுள்ள படைகளையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார்.

மரியா ஜாகரோவா பிப்ரவரி 15
இதேவேளையில் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தனது டெலிகிராமில் “மேற்கத்திய நாடுகளின் போர் பிரச்சாரம் தோல்வியடைந்த நாளாகப் பிப்ரவரி 15, 2022 வரலாற்றில் இடம்பிடிக்கும். அவர்கள் ஒரு குண்டு கூடச் சுடப்படாமல் அவமானப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டனர்.” என எழுதியுள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள்
இதை அடிப்படையாக வைத்துப் பல அமெரிக்க அதிகாரிகள் சிலர் ரஷ்யா இன்று அல்லது நாளைக்குள் உக்ரைன் நாட்டிற்குள் படையெடுக்கும் என்று சிலர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

கலவையான தகவல்கள்
இந்தக் கலவையான தகவல்களில் உறுதியாக இருப்பது, ரஷ்யா சில படைகளை வெளியேற்றியுள்ளது, ஜெர்மனி அதிபர் புடின்-ஐ சந்திப்பது தான். இது இரண்டும் முதலீட்டுச் சந்தைக்குச் சாதகமாக மாற்றியுள்ளது.

ஐரோப்பிய சந்தை
இன்று ஐரோப்பிய சந்தையில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், யூரோநெக்ஸ்ட் என அனைத்து முக்கியச் சந்தைகளும் உயர்வுடன் காணப்படுகிறது. குறிப்பாக ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய சந்தைகள் 1.3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வை பதிவு செய்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை
இதன் எதிரொலியாகக் காலை வர்த்தகத்தில் 200 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ் மெல்ல மெல்ல உயர்ந்து வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1736.21 உயர்ந்து 58,142.05 புள்ளிகளை அடைந்துள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 509.65 புள்ளிகள் உயர்ந்து 17,352.45 புள்ளிகளை அடைந்துள்ளது.
After Russia pull out some Forces from Ukraine Border, Germany Olaf Scholz meets vladimir putin
After Russia pull out some Forces from Ukraine Border, Germany Olaf Scholz meets Vladimir Putin ரஷ்ய படைகள் வெளியேற்றம்.. பேச்சுவார்த்தைக்கு வந்த ரஷ்யா.. பங்குச்சந்தை உயர்வு..!