ராகுல் காந்தியின் ட்வீட் பதிவுக்கு எதிராக 1000 பேர் போலீசில் புகார்- பாஜக

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 10-ம் தேதி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில்,
எங்கள் ஒன்றியத்தில் பலம் உள்ளது.
நமது கலாச்சாரங்களின் ஒன்றியம்.
எங்கள் பன்முகத்தன்மை ஒன்றியம்.
எங்கள் மொழிகளின் ஓன்றியம்.
எங்கள் மக்கள் ஒன்றியம்.
நமது மாநிலங்களின் ஒன்றியம்.
காஷ்மீர் முதல் கேரளா வரை. குஜராத்தில் இருந்து மேற்கு வங்கம் வரை இந்தியா அதன் அனைத்து வண்ணங்களிலும் அழகாக இருக்கிறது.
இந்தியாவின் ஆன்மாவை அவமதிக்காதீர்கள.. என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அவரது மகனுக்கு எதிராக காங்கிரஸின் மாணவர் மற்றும் இளைஞர் பிரிவினர் நடத்திய போராட்டத்திற்கு பிறகு பகிரப்பட்டுள்ளது.
 

இந்த பதிவுக்கு எதிராக, “வடகிழக்கு மாநிலங்கள் எதையும் குறிப்பிடாமல், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து பிரித்து ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் குறிப்பிட்டிருப்பதாக” பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா இளைஞர் அணியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் பிஸ்வவஜித் கவுண்ட் கூறுயைில், “காஷ்மீர் முதல் கேரளா வரையிலும், குஜராத் முதல் மேற்கு வங்கம் வரையிலும் இந்தியா நீண்டுகொண்டிருப்பதாக காந்தி குறிப்பிட்டார். இதன் மூலம் இந்தியாவில் இருந்து வடகிழக்கு பகுதிகள் நீக்கப்பட்டன. இது இந்தியாவின் புவியியல் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்திக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகார்கள் பதிவாகி உள்ள அளித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்.. நான் பயங்கரவாதி இல்லை, ஒரு மாநில முதல் மந்திரி – சரண்ஜித் சிங் சன்னி ஆவேசம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.