ஹாங்காங் : ‘மூன்று வயது குழந்தைகளுக்கும் இன்று(பிப்.,15) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்’ என, ஹாங்காங் அறிவித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், ‘ஒமைக்ரான்’ வகை தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஐந்து வயது குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று முதல் மூன்று வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படுகிறது. மாலை ஆறு மணிக்குப் பின் அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டு இருப்பதால், காய்கறி கடைகள், சலூன்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஹாங்காங் மக்கள் தொகையில் குழந்தைகளை தவிர்த்து இதுவரை 73 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஹாங்காங் : ‘மூன்று வயது குழந்தைகளுக்கும் இன்று(பிப்.,15) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்’ என, ஹாங்காங் அறிவித்துள்ளது.நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.