ஹிஜாப் மோதல் : கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

தும்கூர்:
ஹிஜாப் விவகாரம் காரணம் கர்நாடகாவில் மூடப்பட்டிருந்த 10 வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த 14ம் தேதி திறக்கப்பட்டன.
இந்நிலையில் ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரிகள் மற்றும் பட்டப்படிப்பு கல்லூரிகளுக்கு இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக
கர்நாடகா கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்திருந்தார்.
நாளை மீண்டும் கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், தும்கூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தும்கூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 
ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் உட்பட அனைத்து வகையான கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தூண்டுதல் கோஷங்கள், பாடல்கள் மற்றும் பேச்சுக்களும்  தடை செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, உடுப்பி மாவட்ட நிர்வாகம் 19 ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 வது தடை உத்தரவுகளை விதித்துள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களிலிருந்தும் 200 மீட்டர் தொலைவில் இந்த உத்தரவு அமலில் இருக்கும். 
இந்த மாவட்டங்கள் தவிர, பாகல்கோட், பெங்களூரு, சிக்கபல்லாபுரா, கடக், ஷிமோகா, மைசூர் மற்றும் தட்சிண கன்னடா ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  
சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் பல நகரங்களிலும் பள்ளிகளுக்கு அருகிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்… சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆதாரம் கேட்ட தெலுங்கானா முதல்வர் பாகிஸ்தான், சீனாவின் ஏஜென்ட்- பண்டி சஞ்சய்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.