இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, இந்திய பங்கு சந்தைகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருபவர். முதலீடு மட்டும் அல்ல பல கோடி லாபத்தினையும் சம்பாதித்தவர்.
பங்கு சந்தைகளில் முதலீடு செய்து வெற்றிகரமாக நடைபோட்டு வரும் ஜுன்ஜுன்வாலா, தனது போர்ட்போலியோவில் பல பங்குகளை வைத்துள்ளார்.
இன்று பங்கு சந்தை தொடக்கத்திலேயே தனது போர்ட்போலியோவில் உள்ள 2 பங்குகள் மூலம், சந்தை தொடங்கிய 10 நிமிடங்களுக்குள் 186 கோடி ரூபாய் லாபத்தினை ஈட்டியுள்ளார்.
ரூ.6 டூ ரூ.150.. பல மடங்கு லாபம் கொடுத்த பென்னி பங்கு.. நீங்க வாங்கியிருக்கீங்களா?
என்ன பங்கு?
என்ன பங்கு அது? இன்றைய நிலவரம் என்ன? எதனால் இந்த பங்கில் இந்தளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ஜுன்ஜுன்வாலாவுக்கு மிகவும் பிடித்தமான டாடா குழுமத்தினை சேர்ந்த டைட்டன் மற்றும் டாடா மோட்டார்ஸ் தான் அந்த பங்குகள்.
டைட்டன்
டைட்டன் நிறுவன பங்கின் விலையானது சந்தை தொடங்கிய 10 நிமிடத்திலேயே 37 ரூபாய் ஏற்றம் கண்டிருந்தது. இந்த பங்கில் டிசம்பர் காலாண்டு நிலவரப்படி, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகாவின் வசம் 5.09% அல்லது 4,52,50,970 பங்குகள் உள்ளன. இன்று வரையில் இந்த பங்குகளில் மாற்றம் இருப்பதாக தெரியவில்லை.
சில நிமிடங்களில் பல கோடி லாபம்
இந்த நிலையில் தான் ஜெம் & ஜீவல்லரி பங்கில் சந்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, ஜுன்ஜுன்வாலாவுக்கு 167.24 கோடி ரூபாய் லாபத்தினை கொடுத்துள்ளது.
இதில் ராகேஷ் வசம் 3.57 கோடி பங்குகள் அல்லது 4.02% பங்குகளும், அவரது மனைவி ரேகா வசம் 95.40 லட்சம் அல்லது 1.07% பங்குகளும் இருந்தது.
டாடா மோட்டார்ஸ்
இதே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையும் சந்தை தொடங்கி 10 நிமிடத்திற்குள்ளேயே 4.80 ரூபாய் அதிகரித்தது. இதில் ஜுன்ஜுன்வாலா வசம் டிசம்பர் காலாண்டு நிலவரப்படி, 3.93 கோடி அல்லது 1.18% பங்குகள் உள்ளது. இந்த பங்கில் 10 நிமிடங்களில் 18.86 கோடி ரூபாய் லாபம் அதிகரித்துள்ளது. ஆக மொத்தம் இந்த இரு பங்குகளில் ஜுன்ஜுன்வாலாவுக்கு 186 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.
டைட்டன் பங்கு விலை
டைட்டன் பங்கு விலையானது இன்று என்.எஸ்.இ-யில் 4.08% அதிகரித்து, 2495.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் உச்சம் 2499.80 ரூபாயாகவும், இதன் குறைந்தபட்சம் 2399 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
இதே பிஎஸ்இ-ல் 4.02% அதிகரித்து, 2493.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் உச்சம் 2500 ரூபாயாகவும், இதன் குறைந்தபட்சம் 2399.80 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.இதன் 52 வார உச்ச விலை 2687.30 ரூபாயாகவும், 52 வார குறைந்தபட்ச விலை 1396.25 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது
டெக்னிக்கல் பேட்டர்ன்
டைட்டன் பங்கின் விலையானது 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜூக்கும் மேலாகவும், இதுவே 5 நாள், 20 நாள் மூவிங் ஆவரேஜ்ஜூக்கும் கீழாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதே டாடா மோட்டார்ஸ் பங்கு விலையானது100 நாள், 200 நாள் மூவிங் ஆவ்ரேஜ்ஜூக்கும் மேலாகவும், 5 நாள், 20 நாள் மற்றும் 50 நாள் மூவிங் ஆவரேஜ்ஜூக்கும் கீழாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
These Tata stocks made rakesh jhunjhunwala richer by Rs.186 crore in 10 mins
These Tata stocks made rakesh jhunjhunwala richer by Rs.186 crore in 10 mins/10 நிமிடத்தில் ரூ.186 கோடி சம்பாதித்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.. எப்படி சாத்தியம்..!