தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அந்தந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று அம்பை, கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவரிடம் கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என பெண்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதிலளித்த அவர், நீங்கள் பேருந்து கட்டணத்தை அதிகமாக இருக்கனு சொன்னிங்க, ஆனா இப்போ பேருந்துக்கு கட்டணம் வேண்டாமுன் முதல்வர் சொல்லிட்டார். ஆனா, சிலிண்டர் விலையை குறைக்கும் அதிகாரம் மாநில அரசு கிட்ட இல்ல. அது, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவிடம் தான் இருக்கு.
அத போய் பாஜக கிட்ட கேளுங்க.. கேள்வி கேட்ட பெண்ணுக்கு கனிமொழி பதில் . pic.twitter.com/oudvAzBaxM
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) February 16, 2022
உங்களிடம் வாக்கு கேட்டு வரும் பா.ஜ.க., அ.தி.மு.க.வினரிடம் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு பற்றி கேட்டு விலையை குறைக்க சொல்லுங்கள். ஏனென்றால், நாடாளுமன்றத்திலும்,மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களிடமும் தொடர்ந்து சிலிண்டர் விலையை குறைக்க கூறி வருகிறோம். முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். தொடர்ந்து போராடி வருகிறோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘மக்களுக்காக உழைக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை நம்புங்கள்’ – நடிகை ரோகிணி