இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில், 30,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கும் தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,615 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 27,409 ஆக இருந்தநிலையில், அது இன்று 11% உயர்ந்து பதிவாகியுள்ளள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 82,988 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,18,43,446 அதிகரித்துள்ளது. இது நேற்றைவிட சற்று அதிகமாகும்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3,70,240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 514 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக நேற்றைய தினம் 347 பேர் என்றிருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, இன்று 150-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,09,872 என அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் நாடு முழுவதும் இதுவரை 173.86 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 41,54,476 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது.
India reports 30,615 fresh COVID cases (11% higher than yesterday’s numbers), 82,988 recoveries, and 514 deaths in the last 24 hours
Active case: 3,70,240
Daily positivity rate: 2.45%
Total recoveries: 4,18,43,446
Total vaccination: 173.86 crore doses pic.twitter.com/hWF23qk7Jp
— ANI (@ANI) February 16, 2022
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,51,677 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அதில் 30,615 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, கொரோனா உறுதிசெய்யப்படுவோர் விகிதம் 2.45 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தொடர்புடைய செய்தி: கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டில் இலங்கை… 40,000 டன் பெட்ரோல், டீசலை கொடுத்த இந்தியாSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM