இன்ஃபோசிஸ்-ன் அதிரடி திட்டம்.. 55000 பேருக்கு வாய்ப்பு.. யாரெல்லாம் இணையலாம்..!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனம் அடுத்த நிதியாண்டில் 55,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது..

இந்த பணியமர்த்தலில் அதிகம் பிரெஷ்ஷர்களாக இருப்பார்கள் என அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சலீல் பரேக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியான செய்தியில், நாங்கள் அடுத்த நிதியாண்டில் 55000 பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம்.

ஏர் இந்தியா ஊழியர்கள் சோகம்.. ஏர் ஹோஸ்டஸ்-க்கு புதிய கட்டுப்பாடு விதித்த டாடா..!

பயிற்சி கொடுத்து பணியமர்த்தல்

பயிற்சி கொடுத்து பணியமர்த்தல்

இந்த பணியமர்த்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடையும். அடுத்த ஆண்டிலும் அதிக எண்ணிக்கையில் பணியமர்த்துவோம். சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சியினை வழங்குவோம். பிரெஷ்ஷர்களை பணியமர்த்தும் போது, நிறுவனம் ஆறு முதல் 12 வாரங்கள் வரையில் ஒரு விரிவான பயிற்சி அளிக்கும்.

மொத்தம்

மொத்தம்

ஆக மொத்தம் 55,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுளோம். இதில் 52,000 பேர் இந்தியாவிலும், 3000 பேர் மற்ற நாடுகளிலும் பணியமர்த்தப்படவுள்ளனர். மேலும் ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதிலும் நிறுவனம் கவனம் செலுத்தும். மற்ற நிறுவனங்களை போல் அல்லாமல், அனைத்து பணியாளர்களுக்கும் இந்த பயிற்சியினை அளித்து அவர்களின் திறனை மேம்படுத்துவோம்.

அதிக செலவு
 

அதிக செலவு

தற்போது வாடிக்கையாளர்கள் கிளவுட் சேவை மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்காக அதிக செலவு செய்கின்றனர். இதற்கிடையில் அட்ரிஷன் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை சரிசெய்ய நிறுவனம் பிரெஷ்ஷர்களை எடுத்துக் கொண்டு வருகின்றது. அவர்களுக்கு பயிற்சியும் கொடுத்து, ஊழியர்களின் திறனையும் மேம்படுத்தி வருகின்றது. இதன் மூலம் அட்ரிஷன் விகிதம் அதிகரித்தாலும் அதனை கையாள முடிகின்றது.

தேவையும் அதிகரித்து

தேவையும் அதிகரித்து

அதேசமயம் தொடர்ந்து ஐடி துறையின் தேவையும் அதிகரித்து வருகின்றது. ஆக நிறுவனம் அதனை சரி செய்ய பல்வேறு வழிகளில் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள முயற்சி எடுத்து வருகின்றது.

டிசம்பர் 2021 காலாண்டு நிலவரப்படி இந்த நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 25.5% ஆகவும் உள்ளது. எனினும் வருவாயும் நடப்பு ஆண்டில் வலுவான வளர்ச்சியினை காணலாம் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இன்றைய பங்கு விலை

இன்றைய பங்கு விலை

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் இன்று சற்று குறைந்து, 1733.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 1755.45 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 1726.85 ரூபாயாகவும் உள்ளது.

இதே பி.எஸ்.இ-யில் இன்று சற்று குறைந்து, 1732.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 1755.10 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 1727.20 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1953.70 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1230 ரூபாயாகவும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Infosys may hire 55,000 freshers in FY23: salil parekh

Infosys may hire 55,000 freshers in FY23: salil parekh/இன்ஃபோசிஸ்-ன் அதிரடி திட்டம்.. 55000 பேருக்கு வாய்ப்பு.. யாரெல்லாம் இணையலாம்..!

Story first published: Wednesday, February 16, 2022, 20:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.