ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐயப்பன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பெருமாபாளையத்தை சேர்ந்த ஐயப்பன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், வீட்டில் இரவில் துங்கிக்கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தார் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற நிலையில், வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வேட்பாளர் உயிரிழந்ததால் அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டில் தேர்தல் ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.