கெய்வ்
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டில் வசிக்கும் மாணவர்கள் உள்பட இந்தியர்கள் வெளியேறும்படி தலைநகர் கெய்வ் ல் உள்ள இந்திய தூதரகம் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அறிவித்தது.
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் நாடு திரும்ப கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அந்த விமானங்களின் பட்டியலையும் தூதரகம் வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பிற இந்தியர்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் இந்தியாவிற்கு பயணிக்க கிடைக்கக் கூடிய மற்றும் வசதியான விமானங்களை முன்பதிவு செய்யுமாறும் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா போன்ற விமான நிறுவனங்கள் இந்தியாவுக்கு கூடுதல் விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் இந்திய தூதரகம் உறுதியளித்தது.
இதையும் படியுங்கள்…
உக்ரைனை ரஷ்யா தாக்க அதிக வாய்ப்பு உள்ளது – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்