மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் இருந்து, மேலும் சில படைகள் திரும்ப பெறப்பட்டு உள்ளதாக ரஷ்யா தெரிவித்து உள்ளது.
உக்ரைன் எல்லையில் தனது படைகளை ரஷ்யா குவித்தது. இதனால், அங்கு போர் பதற்றம் ஏற்பட்டது. கிரிமியா உள்ளிட்ட உக்ரைன் எல்லையில் உள்ள பல்வேறு பகுதிகளில் ரஷ்யா படைகளை குவித்து போர் பயிற்சி அளித்து வந்தது. இதனால், அப்பகுதியில் உருவான பதற்றத்தை தணிக்க மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு தலைவர்கள் தொடர்ந்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின. இதனால், தன் பிடிவாதத்தில் இருந்து சிறிது இறங்கி வந்த ரஷ்யா, உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ள வீரர்கள் சிலர் தங்களது முகாமுக்கு திரும்பியதாக அறிவித்தது.
இந்நிலையில், எல்லையில் இருந்து மேலும் படைகள் குறைக்கப்பட்டு உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கிரிமியா தீபகற்ப பகுதியில் நடக்கும் ராணுவ பயிற்சி நிறைவு செய்வதாகவும், அங்கு நிலை நிறுத்தப்பட்டிருந்த படைகள் முகாமிற்கு திரும்பி விட்டதாக தெரிவித்துள்ளது.
Advertisement