இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 2வது வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று ஏற்றத்தில் தொடங்கின. முடிவிலும் நல்ல ஏற்றத்தினை கண்டு முடிவடைந்துள்ளன.
இது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற பதற்றமான நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அந்த சூழலில் இருந்து சற்று மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தெரிகின்றது.
3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்!
அதாவது ரஷ்ய படைகள் சில உக்ரைன் எல்லையில் இருந்து முகாமுக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
காரணம் இதுவாக இருக்கலாம்
இது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவினை எச்சரித்ததோடு, ஜி7 நாடுகள் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தால், பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில் தான் ரஷ்யா சற்று பின் வாங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தொடக்கம் எப்படி?
இன்று காலை தொடக்கத்திலேய் சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கின. குறிப்பாக தொடக்கத்தில் சென்செக்ஸ் 353.58 புள்ளிகள் அதிகரித்து, 56,759.42 புள்ளிகளாகவும், நிஃப்டி 103.60 புள்ளிகள் அதிகரித்து, 16,946.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1295 பங்குகள் ஏற்றத்திலும், 750 பங்குகள் சரிவிலும், 71 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
முடிவு எப்படி?
இதனையடுத்து முடிவிலும் பெரும் ஏற்றத்தினை கண்டுள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் 1736.21 புள்ளிகள் அதிகரித்து, 58,142.05 புள்ளிகளாகவும், நிஃப்டி 509.70 புள்ளிகள் அதிகரித்து, 17,352.50 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதில் 1996 பங்குகள் ஏற்றத்திலும்,1286 பங்குகள் சரிவிலும், 90 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக பிஎஸ்இ டெக் 4% மேலாக ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. இதே பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ டெக்,பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி 50 உள்ளிட்ட குறியீடுகள் 3% மேலாக ஏற்றத்திலும், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி 2% மேலாகவும், மற்ற குறியீடுகள் 1% மேலாகவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி & சென்செக்ஸ் குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே சிப்லா, ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, பஜாஜ் பின்செர்வ், லார்சன், டைட்டன் நிறுவனம் டாப் கெயினராக உள்ளது.
பணவீக்கம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான பதற்றமானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எண்ணெய் விலையானது 7 வருட உச்சத்தில் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை ஊக்குவிக்கலாம் என்ற நிலையில், இது பங்கு சந்தைகளில் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.எனினும் வரவிருக்கும் நாட்களில் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போக்கு சந்தையில் எதிரொலிக்கலாம்.
Closing bell: sensex jump over 1700 points above, nifty ends above 17,300
Closing bell: sensex jump over 1700 points above, nifty ends above 17,300/உக்ரைன் எல்லையில் படைகள் குறைப்பு? ரஷ்யா முடிவால் 1700 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்..!