கொரோனா, ஒமிக்ரான்-ஐ தொடர்ந்து உலக நாடுகளின் விலைவாசி தாறுமாறாக அதிகரித்துள்ள நிலையில் பணவீக்கத்தை எதிர்த்து போராடி வரும் நிலையில், ரஷ்யா – உக்ரைன் எல்லை பிரச்சனை பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது.
இவ்விரு நாடுகளின் பிரச்சனை ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா எனப் பல முன்னணி நாடுகளைப் பாதிக்கும் காரணத்தால் வல்லரசு நாடுகள் தனது ஆதிக்கத்தைக் காட்ட அண்டை நாடுகள் உடன் கூட்டணி சேர துவங்கியுள்ளது.
இதனால் ரஷ்யா – உக்ரைன் நாடுகள் மத்தியில் போர் மூண்டால் உலக நாடுகள் மத்தியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அப்படி இந்தியாவில் எந்தப் பொருட்களின் விலை முதலில் உயரும், எப்படி உயரும் என்பதைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
Russia-Ukraine: எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய சீனா, போருக்கு தயாராகும் ரஷ்யா

ரஷ்யா கச்சா எண்ணெய்
உலகிலேயே ரஷ்யா 3வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடாக இருக்கிறது, இதுமட்டும் அல்லாமல் ஐரோப்பா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு ரஷ்யாவில் இருந்து தான் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ரஷ்யா உக்ரைன் போர்
இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தால் மேற்கத்திய நாடுகள் கூட்டணி ரஷ்யா மீது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடை விதிக்கத் தயாராக உள்ளது. இதனாலேயே கச்சா எண்ணெய் விலை தற்போது 96 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

5 மாநில தேர்தல்
இதே சூழ்நிலையில் இந்தியாவில் 5 மாநில தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நவம்பர் மாதத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை 7 வருட உயர்வை அடைந்தும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் தொடர்ந்து ஓரே விலையில் உள்ளது.

பெட்ரோல்
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து, இந்தியாவில் 5 மாநில தேர்தல் முடிந்து மத்திய அரசு சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 120 ரூபாய் அளவீட்டை எளிதாகத் தாண்டும்.

சன்பிளவர் ஆயில் ஏற்றுமதி
இதேபோல் உலகின் மிகப்பெரிய சன்பிளவர் ஆயில் ஏற்றுமதி நாடாக விளங்கும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் கட்டாயம் சன்பிளவர் ஆயில் ஏற்றுமதி பாதிக்கப்படும். இதனால் பற்றாக்குறை அதிகமாகி ஏற்கனவே உச்ச விலையில் இருக்கும் சமையல் எண்ணெய் 200 ரூபாயை தொட வாய்ப்பு அதிகம்.

தங்கம் விலை
கடந்த ஒரு வாரமாக ரஷ்யா உக்ரைன் பிரச்சனையின் காரணமாகச் சர்வதேச முதலீட்டு சந்தை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்கம் மீது முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இதனால் தங்கம் விலை 1866 டாலர் அளவீட்டை கடந்துள்ளது. இனியும் ரஷ்யா உக்ரைன் பிரச்சனை தொடர்ந்து 1900 டாலரை எளிதாகக் கடக்கும்.
If Russia invades Ukraine cooking oil, petrol, Gold price may hit roof in India
If Russia invades Ukraine cooking oil, petrol, Gold price may hit roof in India உக்ரைன்-ஐ தொட்டால்.. பெட்ரோல் விலை 120, சன்பிளவர் ஆயில் விலை 200.. இந்திய மக்களுக்குப் பாதிப்பு..!