உசிலம்பட்டி காதி கிராப்ட் நூல் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க மூன்று குழு கொண்ட தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய உபகிளையில் உள்ள குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் குடோனில் இருந்த நூல்கள் எரிந்து சேதமடைந்து கொண்டிருக்கும் நிலையில் தகவலறிந்து விரைந்து வந்துள்ள உசிலம்பட்டி, டி.கல்லுப்பட்டி, ஆண்டிபட்டி பகுதிகளைச் சேர்ந்த மூன்று தீயணைப்புத்துறை குழுவினர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீயிணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, ஆடைகள் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த சுமார் 20 லட்சம் மதிப்பிலான நூல்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக கிளை மேலாளர் ஐய்யனன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த குடோனுக்கு அருகே டைல்ஸ் குடோன் உள்ளது.
அங்கும் தீ பரவத்தொடங்கிய நிலையில், அப்பகுதியில் டைல்ஸ் மட்டும் சேதமடைந்தது. அதற்குள் அதை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தொடர்புடைய செய்தி: பெய்ஜிங் ஒலிம்பிக் – ஊக்கமருந்து சர்ச்சையால் ரஷ்ய வீராங்கனைக்கு பதக்கம் நிறுத்தி வைப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM