உத்தரப்பிரதேசத்தில் உறவினரின் திருமணத்திற்கு விடுமுறை மறுக்கப்பட்டதால் விரக்தியடைந்த ரயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் தனது மைத்துனரின் திருமணத்திற்கு விடுமுறை மறுக்கப்பட்டதால் ரயில்வே டிராக்மேன் ஒருவர் தண்டவாளத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரது கடைசி தருணங்களின் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் தனது சக ஊழியர்களிடம் தனக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றி கூறுவதைக் கேட்க முடிந்தது. வரும் 19-ஆம் தேதி நடக்கும் திருமணத்தில் அவர் கலந்து கொள்ளவிருந்ததாகக் கூறப்படுகிறது.
மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)
இதையும் படிக்க: மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 70 லட்சம் மோசடி: தம்பதியர் உட்பட 4 பேர் கைதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM