கிழக்கு கனடாவின் கடலில் சென்று கொண்டிருந்த ஸ்பானிஷ் மீனவர்களின் விசைப்படகு விபத்துக்குள்ளாகியுள்ளது. நியூஃபவுண்ட்லேண்ட் என்ற இடத்திலிருந்து கிழக்கே 250 கடல் மைல் தொலைவில் படகு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான படகில் 24 பேர் சென்ற நிலையில், படகு விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் மாயமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமானவர்களை தேடும் பணியில்
கனடா
நாட்டு கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடுமையான வானிலை, தேடுதல் பணிக்கு சவாலாக இருப்பதாகவும், ஹெலிகாப்டர், ராணுவ விமானம், கடலோர காவல்படை கப்பல் மூலம் காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“லன்ச்சுக்கு முழு டைனோசர்.. அப்படியே முழுங்கு”.. அதிர வைத்த அந்தக் கால முதலை!
விபத்துக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருந்தாலும், அதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்குள்ளான படகில் சென்ற 24 பேரில் 16 பேர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள், ஐந்து பேர் பெரு நாட்டை சேர்ந்தவர்கள், மூன்று பேர் கானா நாட்டை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.