பெங்களூரு,
ஹிஜாப் விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து உயர்நிலை பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் ஒரு வார விடுமுறைக்கு பிறகு பி.யூ.சி. உள்பட டிகிரி கல்லூரிகள் இன்று(புதன்கிழமை) திறக்கப்படுகின்றன. இதையடுத்து மாவட்ட கலெக்டர்கள் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருடன் அமைதி-நல்லிணக்க கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
அதில் கலெக்டர்கள், கல்லூரிகளில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க கல்லூரிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கர்நாடக அரசு, ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.