ஹாங் காங்கில் கொரோனா பாதிப்புகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், ஏராளமான கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வெளியே கடும் குளிரில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம்மாத தொடக்கத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் 100 க்குள் இருந்த நிலையில், 2 வாரங்களில் அந்த எண்ணிக்கை 40 மடங்கு அதிகரித்து, இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு 4,285 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தடுப்பூசி செலுத்த தயங்குவதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.