பாகிஸ்தானில் சகோதரியை கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற நபர், பெற்றோர் மன்னித்துவிட்டதால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2016ல் சொந்த சகோதரியை கழுத்தை நெரித்து கொலை செய்தவர் Waseem Azeem. சமூக ஊடகங்களில் செயற்பாட்டாளரும் மொடலுமான 26 வயது Qandeel Baloch என்பவரே, சமூக ஊடக பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவால் சகோதரரால் கொல்லப்பட்டவர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு 2019ல் ஆயுள் தண்டனைக்கும் விதிக்கப்பட்டார்.
தற்போது அவர் தொடர்பில் அவரது பெற்றோர்கள் எடுத்துள்ள முடிவால் Waseem Azeem சிறை தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாமிய விதிகளின் படி தங்களது மகனை மன்னித்ததாக, அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதனையடுத்து நீதிமன்றமும் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பின்னர் இந்த வாரத்திலேயே Waseem Azeem விடுவிக்கப்படலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.