வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் நேர்மறையான வணிக வளர்ச்சி என பல காரணங்களுக்கு மத்தியில், நடப்பு ஆண்டில் ஊழியர்களுக்கு 9.9% சம்பள உயர்வு கிடைக்கலாம் என ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.
இது ஐந்தாண்டுகளில் இல்லாதளவுக்கு உச்சத்தினை எட்டலாம் எனவும் ஆய்வறிக்கை சுட்டி காட்டியுள்ளது.
உலகளாவிய நிறுவனமான Aon’s தனது 26வது சம்பள அதிகரிப்பு கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது.
17 வயதில் மில்லியனர், 30 வயதில் பில்லியனர்.. வியக்கவைக்கும் டெல்லி இவான் சிங்-ன் வளர்ச்சி..!
சம்பளம் அதிகரிக்கலாம்
இந்த அறிக்கையின் படி 2022ம் ஆண்டில் சம்பள உயர்வானது 9.9% ஆக அதிகரிக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 9.3% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Aon-ன் இந்த ஆய்வானது 40-க்கும் மேற்பட்ட துறைகளில் 1500 நிறுவனங்களின் தரவினை ஆய்வு செய்துள்ளது. இது இ-காமர்ஸ், வென்சர் கேப்பிட்டல், ஹைடெக்/ஐடி துறை மற்றும் ஐடி சார்ந்த துறைகள் மற்றும் லைஃப் சயின்ஸ் உள்ளிட்ட துறைகள் இதில் அடக்கம்.
முக்கிய காரணம்
சந்தையில் பணியமர்த்தலை ஊக்குவிக்கும் விதமாக ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு அட்ரிஷன் விகிதம் 21% ஆக அதிகரித்துள்ளது. இதே இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு கிரேட் ரிசைக்னேஷன் காலம் நிலவி வருகின்றது. இதற்கிடையில் நிறுவனங்கள் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள அதிகளவு சம்பள அதிகரிப்பினை செய்து வருகின்றன.
இன்னும் கூடுதலாக அதிகரிக்கலாம்
ஆக இந்த சவாலான காலகட்டத்திற்கு மத்தியில் தான் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள, சம்பள உயர்வு ஏற்கனவே கடந்த ஆண்டில் ஒரு ஆண்டிலேயே இருமுறை உயர்வு, என பல சலுகைகளை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சியும் வலுவான நிலையை எட்டி வருகின்றன. இதன் காரணமாக நடப்பு ஆண்டில் இன்னும் வளர்ச்சி விகிதம் கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு இலக்க வளர்ச்சி
இந்த சம்பள அதிகரிப்பானது சில துறைகளில் இரு இலக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 88% நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் நல்ல வளர்ச்சி இருக்கலாம் என எதிர்பார்க்கின்றன. குறிப்பாக 33% நிறுவனங்கள் தங்களது சம்பள அதிகரிப்பானது இரு இலக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கின்றன. இவைகள் 2021ம் ஆண்டில் 5% வளர்ச்சியினை கண்டன.
வலுவான அடிப்படை
இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை உணர்வு வலுவாக இருப்பதாகவும், இதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமும் வலுவாக உள்ளது. தொற்று நோயின் முதல் அலையின்போது கூட சில்லறை விற்பனை, லாகிஸ்டிக்ஸ், விரைவான உணவு சேவை நிறுவனங்கள் கூட டிஜிட்டல் வளர்ச்சியில் கவனம் செலுத்தின. இதன் காரணம் 8% அல்லது அதற்கு மேற்பட்ட உயர்வுகள் இருந்தது.
சில தலைவலிகளும் உண்டு
எப்படியிருப்பினும் பணவீக்க பிரச்சனை, கொரோனா அச்சுறுத்தல்கள் காரணமாக சில தலைவலிகளையும் பார்க்கிறோம். கொரோனாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அலையின் போது கூட, 2022ம் ஆண்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவில் வலுவான சம்பள உயர்வுகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிரேசிலில் 5% வளர்ச்சியும், ரஷ்யாவில் 6.1%மும், சீனாவில் 6% சம்பள அதிகரிப்பும் இருக்கலாம் என கூறப்படுகின்றது.
Salary increments in india to touch 5 year high of 9.9% in current year
Salary increments in india to touch 5 year high of 9.9% in current year/சம்பளதாரர்களுக்கு ஜாக்பாட்.. சம்பள உயர்வு 5 வருட உச்சத்தினை எட்டலாம்.. !