நடிகர் சிம்பு
மாநாடு
படத்தின் வெற்றியினால் புது உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார். பல ஆண்டுகளாக ஒரு மெகாஹிட் வெற்றிக்காக ஏங்கிக்கொண்டிருந்த சிம்புவிற்கு மாநாடு படம் சரியான நேரத்தில் கைகொடுத்துள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது பல படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மிகப்பெரிய பிரச்சனை ஒன்றில் சிக்கியிருந்தார். 2015 ஆம் ஆண்டு நடிகர்
சிம்பு
பெண்களைப்பற்றி ஆபாசமாக பாடியதாக கூறி இணையத்தில்
பீப் சாங்
ஒன்று வெளியானது. அப்பாடல் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருந்ததாக கூறி பாடலை பாடிய சிம்பு மற்றும் அப்பாடலை இசையமைத்த
அனிருத்
ஆகியோரின் மீது பெண்கள் அமைப்புகள் சார்பாக பல வழக்குகள் போடப்பட்டன.
தனுஷ் எடுத்துள்ள அதிரடி முடிவு?இது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!
மேலும் அவரை கைது செய்யக்கூறி போராட்டமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்த மனு நீதிபதி சந்திரசேகரின் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சிம்புவிற்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் கோவை ரேஸ் கோர்ஸில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்தார்.
மேலும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் சிம்பு மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார். எனவே சமீபத்தில் சிம்பு மீது நடிகர் சங்கம் போட்ட ரெட் கார்டு நீங்கப்பட்டதை அடுத்து, தற்போது பீப் சாங் பிரச்சனையும் முடிவிற்கு வந்துள்ளதால், சிம்பு ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்து தல Glimpse ஏன் இப்படி இருக்கு! படத்தில் நயன்தாரா வேடம்!