சென்னை பெண் செய்த காரியத்தால் வாயடைத்து போன சோமேட்டோ.. இது தான்டா ஒரிஜினல் காதல்..!

உலகம் முழுவதும் மக்கள் காதலர் தினத்தைப் பலவிதமாகக் கொண்டாடி இருப்பார்கள், ஆனால் யாரும் நம் சென்னை கல்லூரியை சேர்ந்த தீக்ஷிதா மாதிரி கொண்டாடி இருக்க மாட்டார்கள் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

பிப்ரவரி 14ஆம் தேதி எங்குத் திரும்பினாலும் காதல் மற்றும் காதலர்கள் குறித்த பதிவுகள் தான் சமுகவலைதளத்தில் டிரெண்டாகிக் கொண்டு இருக்கையில் லின்கிடுஇன் தளத்தில் தீக்ஷிதா பாசு போட்ட பதிவு டேட்டிங் பதிவு தான் வைரல்.

காதலர் தின ஸ்பெஷல்: உலகம் முழுவதும் பெங்களூர் ரோஜா..!

தீக்ஷிதா பாசு

தீக்ஷிதா பாசு

காதலர் தினத்தன்று தீக்ஷிதா பாசு தனது லின்கிடுஇன் பக்கத்தில்,

இந்தக் காதலர் தினத்தில் நான் சோமேட்டோ நிறுவனத்திடம் இன்டர்ன்ஷிப்பிற்காக டேட்டிங் செல்ல விரும்புகிறேன். என்று பதிவிட்டு சோமேட்டோ நிறுவனத்தின் 3 முக்கிய அதிகாரிகளை டேக் செய்ததோடு, ரெஸ்யூம்-க்கு பதிலாக ஒரு சிறப்பான சம்பவத்தைச் செய்துள்ளார் தீக்ஷிதா பாசு.

சத்யபாமா பல்கலைக்கழகம்

சத்யபாமா பல்கலைக்கழகம்

சென்னையில் இருக்கும் பிரபல கல்லூரியான சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயின்று வரும் தீக்ஷிதா பாசு சோமேட்டோ நிறுவனத்தின் இன்டர்ன்ஷிப் வாங்குவதற்காக இந்தப் பதிவைச் செய்துள்ளார். இது தற்போது பெரிய அளவில் வைரலாகியுள்ளது.

14 பக்க அறிக்கை
 

14 பக்க அறிக்கை

பொதுவாக வேவைவாய்ப்புக்கு விண்ணப்பம் செய்வோர் தங்களது தகுதிகளைப் பட்டியலிடும் ரெஸ்யூம்-ஐ தான் அனுப்புவார்கள், ஆனால் தீக்ஷிதா பாசு 14 பக்கத்திற்குச் சோமேட்டோ நிறுவன செயலியில் என்னென்ன மாற்றங்கள் செய்ய முடியும் என்பதைப் பட்டியலிட்டு, அதற்கான தீர்வுகள் மற்றும் விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

Zomato Zing சேவை

Zomato Zing சேவை

இதுமட்டும் அல்லாமல் சோமேட்டோ தளத்தில் ஒரு உணவு அல்லது உணவகம் குறித்து 15 நொடி வீடியோ இணைப்பது மூலம் வாடிக்கையாளர்கள் அனுபவம் மேம்படும், இதன் மூலம் பல உணவகங்கள் அதிகப்படியான டேபிள் புக்கிங் மற்றும் ஆர்டர்களைப் பெற முடியும். இந்தச் சேவைக்கு Zomato Zing எனவும் பெயர் வைத்துள்ளார் தீக்ஷிதா.

 முக்கிய அதிகாரிகள்

முக்கிய அதிகாரிகள்

தீக்ஷிதா 14 பக்கம் அடங்கிய டேட்டிங் பதிவில் சோமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல், சோமேட்டோ நிறுவனத்தின் உணவு டெலிவரி பிரிவின் சிஇஓ ராகுல் கஞ்சூ மற்றும் சோமேட்டோ நிறுவனத்தின் டிசைனர் பிரிவு தலைவர் விஜய் வர்மா ஆகியோரை டேக் செய்திருந்தார்.

பாராட்டுகள்

பாராட்டுகள்

இந்தப் பதிவை பார்த்த ராகுல் கஞ்சூ “தீக்ஷிதா பாசுவின் முயற்சிக்குப் பாராட்டுங்கள்! விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம்” எனக் கமெண்ட் செய்திருந்தார். இதேபோல் டிசைனர் பிரிவு தலைவர் விஜய் வர்மா “கிரேட் வொர்க்” எனக் கமெண்ட் செய்திருந்தார்.

வைரல் பதிவு

வைரல் பதிவு

இந்தப் பதிவுக்கு இதுவரையில் 17,417 லைக்குகள்ஸ 847 கமெண்ட்கள் குவிந்துள்ளது. கடந்த ஆண்டு இதேபோல் மும்பையைச் சேர்ந்த ஒருவர் 3டி வீடியோ அனுப்பிக் கிரெட் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Chennai girl ask zomato for date on Valentine day for internship; Linkedin Post goes viral

Chennai girl ask zomato for date on Valentine day for internship; Linkedin Post goes viral சென்னை பெண் செய்த காரியத்தால் வாயடைத்து போன சோமேட்டோ.. இது தான்டா ஒரிஜினல் காதல்..!

Story first published: Wednesday, February 16, 2022, 17:58 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.