பலம் வாய்ந்த அமைச்சு ஒன்றில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது அமைச்சின் செயலாளரை கடுமையா திட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்று இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
குறித்த அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கைகள் சட்ட விரோதமானவை எனவும் அவற்றை நிறைவேற்ற முடியாது எனவும் செயலாளர் தெரிவித்தமையே இதற்கான காரணம் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த இராஜாங்க அமைச்சர் பதவி விலகும் வரை நிலைமை மோசமடைந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.