மொகாதிசு:
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்-கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அங்கு போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் சோமாலியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஜவஹர் மாவட்டத்தில் போலீசார் ரோந்து செல்லும் சாலையில் பயங்கரவாதிகள் கண்ணி வெடி ஒன்றை புதைத்து வைத்திருந்தனர். அந்த சாலையில் வந்த ஆட்டோ ஒன்று கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஒட்டக வியாபாரிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் அல் ஷபாப் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருப்பார்கள் என சோமாலியா அரசு குற்றம் சாட்டியுள்ளது.