பஞ்சாப் மாநிலத்துக்கு பிரசாரத்துக்கு வந்தால் பிரதமர் மற்றும் கெஜ்ரிவால் டர்பன் அணிந்து இருப்பார்கள். தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ரூப்நகர் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பரப்புரை மேற்கொண்டார். பின்னர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ”பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் வந்தால் மேடையில் தலைபாகை (டர்பன்) அணிந்து இருப்பார்கள். மேடையில் தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள். உண்மையான சர்தார் யார் என்று அவர்களிடம் சொல்லுங்கள். இந்த தலைப்பாகையின் கடின உழைப்பையும் துணிச்சலையும் சொல்லுங்கள்.
பஞ்சாப் பஞ்சாபியர்களுக்கு சொந்தமானது என்று அவர்களிடம் சொல்லுங்கள். நான் அவர்களை சர்தார் ஆக்குவதில்லை. அவர்கள் இருவரும் ஆர்எஸ்எஸ்-லிருந்து பிறந்தவர்கள். ஒருவர் ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் ஒரு போராட்டத்தைத் தொடங்கினார், மற்றவர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர். அவர்கள் இருவருமே ஏழைகள், விவசாயிகளுக்கு எதிரானவர்கள்” என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: அகிலேஷ் யாதவ் போட்டியிடும் தொகுதியில் மத்திய அமைச்சர் கார் மீது தாக்குதல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM