தென்கொரியாவில் கொரோனா பாதிப்பும், அதனால் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அமெரிக்கர்கள் அந்நாட்டிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தென் கொரியாவில், புதிதாக 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், நோய்த்தொற்றுக்கு 61 பேர் உயிரிழந்தனர். ஒமைக்ரான் பரவல் தொடக்கத்தின் போது காணப்பட்ட பாதிப்பை விட இது 12 மடங்கு அதிகமாகும். எனவே, வரும் வாரங்களில் பாதிப்புகளும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடுமென்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், தென்கொரியாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் பயணம் செய்வது அவசியமானால் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதை உறுதிசெய்யுமாறு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.