புதுடில்லி:கென் – பெட்வா நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, ஆணையம் ஒன்றை, மத்திய அரசு நேற்று அமைத்துள்ளது.சமீபத்தில், மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, நதிகளை இணைக்கும் திட்டங்கள் தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.கென் – பெட்வா நதிகளை இணைக்க, 44 ஆயிரத்து 605 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் விரைவில் துவங்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கென் – பெட்வா நதிகள் இணைப்பு திட்டத்திற்காக, ஆணையம் ஒன்றை, மத்திய அரசு நேற்று அமைத்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ் அணை கட்டுவது, நீர்மின் நிலையம் அமைப்பது, சுரங்கங்கள் மற்றும் நீர் வழிப் பாதைகளை கட்டமைப்பது போன்ற பணிகளை இந்த ஆணையம் மேற்கொள்ள உள்ளது.இதற்காக, மத்திய நீர்வளத்துறை செயலர் தலைமையிலான, 20 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ், 221 கி.மீ., நீள கால்வாயும், 2 கி.மீ., நீள சுரங்கப்பாதையும் கட்டமைக்கப்பட உள்ளன. இதற்காக, உ.பி., மற்றும் ம.பி.,யில் உள்ள, 27 லட்சம் ஏக்கர் பாசன நிலம் உபயோகிக்கப்பட உள்ளன.
Advertisement