ரஷ்யா
ஒரு போதும் விரும்பியதில்லை. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. அதற்குத் தீர்வு காணவே நாங்கள் விரும்புகிறோம் என்று ரஷ்ய அதிபர்
விலாடிமிர் புடின்
கூறியுள்ளார்.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக உரசல் இருந்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும்,
நேட்டோ
அமைப்பும் துணை நிற்கிறது. ரஷ்யா தனித்து விடப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா எது செய்தாலும் உடனே அமெரிக்கா வந்து ஆஜராகி விடுகிறது.
இந்த நிலையில் கிரிமீயா தீபகற்பப் பகுதியை முன்வைத்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதட்டம் அதிகரித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்யா முஸ்தீபுகளை செய்து வந்தது. இதனால் போர் வெடிக்கும் அச்சம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைன் எல்லை அருகே குவிக்கப்பட்டிருந்த தனது படையினரில் சில பிரிவுகளை ரஷ்யா மீண்டும் பாசறைக்குத் திரும்ப உத்தரவிட்டது. இதனால் போர்ப் பதட்டம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைன் விவகாரம் குறித்து புடின் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து புடின் கூறுகையில், “ஐரோப்பாவில் போரைக் கொண்டு வர ரஷ்யா விரும்பவில்லை. உக்ரைனிலிருந்து பிரிந்து போன பகுதிகளில் இனப்படுகொலை நடந்து வருகிறது. அதை மின்ஸ்க் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யவே நாங்கள் விரும்புகிறோம்.
உக்ரைன் அருகே நிலை நிறுத்தப்பட்ட ரஷ்யப் படைகளை பகுதி அளவில் வாபஸ் பெற்றுள்ளோம். ரஷ்யாவின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை நாங்கள் மேற்கத்திய நாடுகளுடன் விவாதிக்க இது உதவும். ஆனால் இதுவரை மேற்கத்திய நாடுகள் ஆக்கப்பூர்வமான எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை என்றார்.
முன்னதாக
ஜெர்மனி
நாட்டு சான்சலர் ஓலப் ஸ்கோல்ஸ், புடினை மாஸ்கோவில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஓலப் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஷ்யா படைகளைக் குறைக்க தொடங்கியுள்ளது. இது நல்ல அறிகுறி. இதை ஜெர்மனி வரவேற்கிறது என்றார்.
என்ன பரமா பயந்துட்டியா??.. திடீரென பாசறைக்குத் திரும்பும் ரஷ்ய படைகள்!
அதேசமயம், நேட்டோ அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள், ரஷ்ய படை குறைப்பு குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், இன்னும் பெரிய அளவில் படைகள் குறைக்கப்படவில்லை என்பதே எங்களுக்குக் கிடைத்துள்ள உளவுத் தகவல் என்றார்.
உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், படைகளைத் திரும்பப் பெறுவதே நிரந்தர தீர்வு என்றார்.
உக்ரைன் எல்லை நெடுகில் கிட்டத்தட்ட 1.3 லட்சம் படையினரை ரஷ்யா குவித்து வைத்துள்ளது. இதுதவிர போர் விமானங்களையும், பீரங்கிப் படையையும் ரஷ்யா குவித்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.