ஜெர்மனியின் பிரபல நகரமான முனிச்சில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று இன்று காலை வழக்கம்போல் புறப்பட்டது. அதில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்து கொண்டிருந்தனர்.
எபென்ஹவுசென்-ஷ்லோபட்லார்ன் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, அதே தண்டவாளத்தில் எதிர்பாராதவிதமாக, எதிர்திசையில் மற்றொரு பயணிகள் ரயில் வந்தது. இதனையறிந்து பயணிகள் அதிர்ச்சியடைந்து கூக்குரலிட்டனர்.
உடனே இரண்டு ரயில்களும் மோதி கொள்ளாதவண்ணம் நிறுத்த ஓட்டுநர்கள் முயற்சித்தனர். ஆனால், ரயில்கள் பயணித்த வேகத்தில் அவற்றை உடனடியாக நிறுத்த முடியவில்லை. இதனால் இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
கனடா படகு விபத்து: 10 பேர் பலி; 11 பேர் மாயம்!
இந்த கோர விபத்தில் இரண்டு ரயில்களின் இன்ஜின் உள்ளிட்ட முன்பகுதி உருகுலைந்தன. விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் படுகாயமடைந்த 40 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.