இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலையை அந்நாட்டு அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது.
அதன்படி பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 159 ரூபாய் 86 பைசாவாக உள்ளது.
ஒரு லிட்டர் டீசல் விலை 9 ரூபாய் 4 காசு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் டீசல் 154 ரூபாய் 15 காசுகளுக்கு விற்கப்படுகிறது.
மண்ணெண்யை விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் மண்ணெண்ணை விலை 10 ரூபாய் 8 காசுகள் உயர்த்தப்பட்டு, 126 ரூபாய் 56 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த இந்த விலை உயர்வு பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை இல்லாததாக கருதப்படுகிறது.
இந்த மாதம் 28ம் தேதிவரை இந்த விலை உயர்வு அமலில் இருக்கும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்….பூஸ்டர் தடுப்பூசி செயல்திறன் 4 மாதத்தில் குறைகிறது- அமெரிக்க ஆய்வில் தகவல்