“மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் 49 லட்சம்பேர் பயன்”- மா.சுப்பிரமணியன்

மழலையர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் மட்டும் மாஸ்க் அணிந்தால் போதுமானது என்றும் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு அரசின் `மக்களை தேடி மருத்துவம் திட்டம்’ மூலம் இதுவரை 49 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்து உள்ளதாகவும், விரைவில் 50 லட்சமாவது பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்க உள்ள ரோபோடிக் சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். 

தமிழ்நாடு ஓமந்தூரார் அரசு உயர் பன்னோக்கு மருத்துவமனையில் ரூபாய் 35 கோடி செலவில் ரோபோடிக் அட்வான்ஸ் சர்ஜரி இயந்திரம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. #masubramanian #TNHealthminister #roboticsurgery #inspection #TransformingSurgery pic.twitter.com/cAkbp9aeNA
— Subramanian.Ma (@Subramanian_ma) February 16, 2022

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசும்போது, “தமிழகத்தில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழக அரசு மருத்துவமனைகளில் ரூ.35 கோடி செலவில், ரோபோடிக் அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு, முதலமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்தியாவில் இதுபோன்ற சாதனங்கள் 75 இடங்களிலும், தமிழகத்தில் 6 தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இருந்துவந்தது. அவற்றை தொடர்ந்து தற்போது மாநில அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற வசதி முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.
இவையன்றி தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலவே கேன்சர் தொற்றினை முதல் நிலையிலேயே கண்டறிவதற்காக தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. காஞ்சிபுரம், மதுரை, நாகை, சேலம் ஆகிய மாவட்டங்களில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது. புற்றுநோய் மரணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை தமிழ்நாட்டில் 49,79,560 பேர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயனடைந்து உள்ளனர். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பிசியோதெரபி தேவைப்படுபவர்கள் என் அனைவருக்கும் இந்த திட்டம் பயனடைந்து உள்ளது. வரும் 20ம் தேதி மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில், 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்துகளை முதலமைச்சர் வழங்க உள்ளார். அன்றைய தினமே அதிநவீன உயிர்காக்கும் உபகரணங்கள் பொருத்தப்பட்ட 188 ஆம்புலன்ஸ் வாகனத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். `இன்னுயிர் காப்போம்; நம்மை காக்கும்’ திட்டத்தில் இதுவரை 640 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன.
image
மழலையர் பள்ளிகளில் மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை. 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் மட்டும் மாஸ்க் அணிந்தால் போதும் என ICMR வழிகாட்டுதல் உள்ளது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவினால் வழக்குகளை சந்திக்க நேரிடுமோ என பொதுமக்களிடம் தயக்கம் உள்ளது. பொதுமக்கள் தயங்காமல் உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அப்படி உதவுவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். நெடுஞ்சாலைகளில் விபத்துகளில் சிக்கியவர்களை அனுமதிக்க மருத்துவனை எங்குள்ளது என தகவல் பலகைகள் வைக்கப்படும்’ என்ரார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.