வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..!

2021ல் வருமான வரித்துறை இந்தியாவில் வர்த்தகம் செய்து வரும் பல்வேறு சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தில் சோதனை செய்தது. இந்தச் சோதனையில் சியோமி, ஓப்போ உட்படப் பல நிறுவனங்கள் செய்த 6500 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது மட்டும் அல்லாமல் அபராதமும் விதிக்கப்பட்டது.

சந்திரசேகரன் கைக்கு வரும் 3 புதிய நிறுவனங்கள்.. அரசு ஓகே சொல்லுமா.. காத்திருக்கும் டாடா..!

இந்நிலையில் தற்போது வருமான வரித்துறை சீனாவின் முன்னணி டெலிகாம் மற்றும் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனையைத் துவங்கியுள்ளது.

சீன நிறுவனங்கள்

சீன நிறுவனங்கள்

சீன நிறுவனங்கள் இந்தியாவில் தனது கூட்டணி நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து வரும் நிலையில் பல்வேறு வரி ஏய்ப்புச் செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பாகச் சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய்-க்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஹூவாய்

ஹூவாய்

டெல்லி, குருகிராம், பெங்களூரு ஆகிய இடங்களில் ஹூவாய் நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் வளாகங்களில் நேற்று முதல் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி வரி ஏய்ப்பு விசாரணையின் ஒரு பகுதியாக, ஹூவாய் நிறுவனத்தின் நிதி ஆவணங்கள், கணக்குப் புத்தகங்கள் மற்றும் நிறுவனத்தின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

 வரி ஏய்ப்பு
 

வரி ஏய்ப்பு

இந்தச் சோதனையில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதற்கான சில ஆதாரங்களை வருமான வரித்துறை கண்டுபிடித்துக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது. இதேவேளையில் ஹூவாய் நிறுவனம் தாங்கள் இந்தியாவில் செய்யும் வர்த்தகம் அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

5G சேவையில் தடை

5G சேவையில் தடை

மத்திய அரசு சீன நிறுவனங்களுக்கு அடுத்தடுத்து நெருக்கடியும், ஒழுங்குமுறையும் செய்து வரும் நிலையில் இந்தியாவில் 5G டெலிகாம் சேவை அளிப்பதற்காகச் சோதனைகளில் இருந்து ஹூவாய் நிறுவனத்தை ஒதுக்கி வைத்துள்ளது.

Huawei மற்றும் ZTE

Huawei மற்றும் ZTE

இதேவேளையில் டெலிகாம் ஆபரேட்டர்கள் தங்கள் நெட்வொர்க்குகளைத் தொடர்ந்து பராமரிக்கப் பழைய ஒப்பந்தங்களின் படி சீனாவில் Huawei மற்றும் ZTE நிறுவனத்திடம் டெலிகாம் உபகரணங்களை வாங்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் 5ஜி சேவையில் மொத்தமாக ஹூவாய் நிறுவனத்தை ஒதுக்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Income tax dept raided China Huawei premises for tax evasion

Income tax dept raided China Huawei premises for tax evasion வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.