சென்னை: கோயில் இடங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்தாதவர்களின் சொத்துகளை ஜப்தி செய்து ஏலம் விட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதா வது:
நீண்ட காலமாக வாடகை பாக்கி செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்றுவதால் வாடகை பாக்கியை அவர்களிடம் இருந்து திரும்ப பெற முடியாத நிலை உள்ளது. எனவே, நீண்ட காலமாக வாடகை பாக்கி செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்றுவதுடன் அவர்களுடைய சொத்துகளை ஜப்தி செய்ய வேண்டும். அந்த சொத்துகளை ஏலம் விட்டு கிடைக்கும் தொகையில் வாடகை பாக்கியைபெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம், வாடகை பாக்கி நிலுவை விரைவாக வசூல் செய்யப்படும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.