பெங்களூர்:
கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. கல்வி நிறுவனங்களில் மத ரீதியிலான உடைகளை அணியக்கூடாது என்று கர்நாடக ஐகோர்ட்டில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
ஹிஜாப் தொடர்பான வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ள நிலையில் அம்மாநிலத்தின் பல பள்ளிகளில் நேற்று ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகளை அனுமதிக்கவில்லை.
ஹிஜாப்பை நீக்கியபிறகே மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் பல மாணவிகள் தேர்வு எழுதாமல் புறக்கணித்தனர். ஹினா கவுசர் என்ற மாணவி கூறும்போது, நான் பள்ளிக்கு செல்ல ஹிஜாப் அணியாமல் இருக்க வேண்டும் என்று கூறினார்கள். என்னால் அது முடியாது. அதனால் பள்ளிக்கு செல்லவில்லை என்றார்.
இதேபோல இன்றும் ஹிஜாப் அணிந்த மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. ஷிவமோகா கல்லூரிக்கு வந்த 30 மாணவிகளிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனை ஏற்க மறுத்து அந்த மாணவிகள் கல்லூரியில் வகுப்பறையில் இருந்து வெளியேறி வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படியுங்கள்…மனசாட்சி உள்ள எவரேனும் மதுரையை ஸ்மார்ட் சிட்டி என்றழைக்க முடியுமா? கமல்ஹாசன் டுவிட்