Bizarre World: விந்தையுலகம்! சுவற்றிலும் ஆண்குறி! நாற்காலியிலும் ஆணுறுப்பு

உலகம் விந்தையானது. உலகின் ஓரிடத்தில் புனிதமாக கருதப்படுவது வேறொரு இடத்தில் கலையாக பார்க்கப்படுகிறது. 

உலகெங்கிலும் உள்ள நாடுகள் பல விஷயங்களில் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன. சில நாடுகளில் புழக்கத்திலும் வழக்கத்திலும் உள்ளது பெரும்பாலானவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.  

சில நாடுகளில், சுவர்களில் ஆண்குறியின் படங்கள் அலங்காரமாக வைக்கப்பட்டால், சில ஊர்களில் அப்படி இருப்பது அவமதிப்பாக கருதப்படுகிறது.

பூட்டானில் உள்ள ஃபல்லஸ் ஓவியம் – உலகெங்கிலும் உள்ள பூட்டானிய வீடுகளில் நிமிர்ந்த லிங்கத்தின் ஓவியத்தை நீங்கள் காணலாம். இது ஃபாலஸ் பெயிண்டிங் (Phallus Art) என்று அழைக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | சிறியளவு ஆண்குறி கொண்ட ஆண்களுக்கான ப்ரத்தியேக டேட்டிங் தளம்.

இந்த கலைப் படைப்புகளில் கிராமப்புற பூட்டான் வீடுகளில் ஆடைகளில் எம்பிராய்டரி, கல் மற்றும் மர வேலைப்பாடுகளில் ஓவியங்களாகவும், சித்திரங்களாவும் காணப்படுகின்றன.

இந்த நாட்டில், ஆண்குறியின் இந்த படங்கள் ஒரு ரகசிய அடையாளமாக பார்க்கப்படுகின்றன, இது நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது. பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்தே லிங்கப் படத்தை உருவாக்கி வழிபடும் முறை பூட்டானில் உள்ளது. இந்த முறை ட்ருக்பா குன்லே என்பவரால் தொடங்கப்பட்டது. 

மெக்சிகோ நகரத்தின் மெட்ரோவில் “ஆணுறுப்பு இருக்கை”  இருந்த வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்னர் வைரலானது.

மெக்சிகோ நகரின் மெட்ரோ அமைப்பில் திடீரென ஒரு புதிய பாணி இருக்கை தோன்றியபோது, ​​அது சங்கடமானதாகவும்,  அவமானகரமானதாகவும் விமர்சிக்கப்பட்டது. 

பொருத்தமற்ற இந்த வடிவமைப்பால் பலத்த சர்ச்சைகளும் எழுந்தன. பயணிகளுக்கு அதிலும் குறிப்பாக பெண்களுக்கு சங்கடமான உணர்வை ஏற்படுத்தியதால் உலகம் முழுவதும் விமர்சனத்துக்கு உள்ளானது.  

உண்மையில், பெண் பயணிகள் அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தலை முன்னிலைப்படுத்தும் வகையில், ஆண்குறி மற்றும் மார்பகங்கள் கொண்ட இருக்கைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

அதோடு, அந்த இருக்கையில் ஒரு குறிப்பும் எழுதப்பட்டிருந்தது. “இங்கே உட்காருவது சங்கடமாக இருக்லாம், ஆனால் பெண்கள் தங்கள் அன்றாட பயணங்களில் அனுபவிக்கும் பாலியல் வன்முறையுடன் ஒப்பிடும்போது இது ஒன்றும் இல்லை.”

இது விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட ஆண்குறி இருக்கைகள் என்றாலும், உலக அளவில் மிகவும் பேசப்பட்டது. இந்திய பாரம்பரியத்தில் லிங்க வழிபாடு என்பது தொன்றுதொட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 மேலும் படிக்க | உடலுறவின் போது உடைந்த ஆணுறுப்பு! இப்படி எல்லாம் நடக்குமா?

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.