திருவனந்தபுரத்தில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு மாசிமாதம் பொங்கல் விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று நடந்தது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொது இடத்தில் பொங்கலிட கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. எனவே பெண்கள் அனைவரும் வீடுகளிலேயே பொங்கலிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று காலை 10.50 மணிக்கு கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தந்திரி தீ மூட்டி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். அதன்பின்பு வீடுகளில் பெண்கள் பொங்கலிட்டனர். இன்று பிற்பகல் நைவேத்தியம் நடைபெறுகிறது. அப்போது கோவில் பூசாரிகள் வீடுகளுக்கு சென்று சடங்குகளை செய்கிறார்கள்.