புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,757 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட சற்றே அதிகம். தொற்றின் காரணமாக 541 பேர் உயிரிழந்துள்ளனர்.அன்றாட பாதிப்பு குறைந்துள்ளதால் மாநிலங்கள் கரோனா கெடுபிடிகளை தளர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது:
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,757 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அன்றாட பரவல் (பாசிடிவிட்டி) விகிதம் 2.61% என்றளவில் உள்ளது. வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 3.04%. .
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,757 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
* இதுவரை கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 4,27,54,315.
* கடந்த 24 மணி நேரத்தில் 67,538 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,19,10,984.
* கடந்த 24 மணி நேரத்தில் 541 பேர் உயிரிழந்தனர்.
* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,10,413.
* இதுவரை நாடு முழுவதும் 174.24 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் தளர்வுகளுக்கு அனுமதி: “அன்றாட கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால் மாநில அரசுகள் கூடுதல் தளர்வுகளை அனுமதிக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவில் அண்மைக்காலமாக அன்றாட கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தியாவில் இப்போது கரோனா கண்காணிப்புக்கு மேம்படுத்தப்பட்ட வழிகள் உள்ளன. கரோனா நெருக்கடியைக் கையாள போதிய ஆள்பலமும், மருத்துவ உட்கட்டமைப்பு பலமும் உள்ளன. கரோனா அலைகள் எதிர்காலத்தில் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் திறன் உள்ளது. கரோனா பெருந்தொற்று முடிந்துவிட்டதா என்று இப்போதே கூற முடியாது. மார்ச் இறுதி வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டிய காலக்கட்டமே” என்று கூறியுள்ளார்.
அதே வேளையில் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்கள் கரோனா பரிசோதனை செய்தல், தொடர்பு கண்டறிதல், சிகிச்சையளித்தல், தடுப்பூசி செலுத்துதல், மக்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.