அரசின் இன்வெஸ்ட் இந்தியா, இந்தியன் இண்டஸ்ட்ரீஸ் அசோசியஷன் (IIA) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இந்திய தயாரிப்புகளை விற்பதற்கு பிரத்யேக பக்கத்தை அமேசான் உருவாக்கியுள்ளது. இதன் வாயிலாக
அமேசான் ஷாப்பிங்
தளத்தில் ஓடிஓபி (
one district one product
) பொருள்கள் தனியாக பட்டியலிடப்பட்டு விற்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள மூலை முடுக்குகளில் இருந்து உள்ளூர் தயாரிப்பு பொருள்கள், புவிசார் குறியீடு (GI) பெற்ற பொருட்கள் ஆகியவற்றை சந்தைப்படுத்த அமேசான் திட்டமிடப்பட்டுள்ளது. சிறு குறு தொழில்கள் செய்யும் உற்பத்தியாளர்கள், குடிசைத் தொழில் செய்பவர்களுக்கு இந்த தளம் பக்கபலமாக இருக்கும் என
அமேசான் இந்தியா
தலைவர் தெரிவித்துள்ளார்.
Sell Old Phone: பழைய போனுக்கு நல்ல விலை வேண்டுமா… கவலைய விடுங்க!
அமேசான் இந்தியா ‘Made in India’ ஸ்டோர்
இந்திய கலைஞர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்கள், கைத்தறி பொருள்களுக்கு அமேசான் தளத்தில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தயாரிப்புகள் மீது அதீத காதல் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ஒரே இடத்தில் அவர்கள் விரும்பிய பொருள்கள் கிடைக்கும். பொருள்களுடன் அதன் தயாரிப்பு முறையின், அது மருவிய கலாச்சாரம், தோற்ற வரலாறு குறித்தும் அமேசான் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது.
“
Invest India
& IIA ஆகிய அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது பெருமையாக உள்ளது. கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள் மற்றும் வேளாண் உற்பத்தி பொருள்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை முன்னெடுத்துச் செல்வது ஆகியவை குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இதன் மூலமாக பொருளாதார வளர்ச்சி வேகம் அடையும். வேலைவாய்ப்பு உருவாகும் என்பதோடு, ஊரக குடிசைத் தொழில் நல்ல வளர்ச்சியைக் காணும்” என்று அமேசான் இந்தியா நிறுவனத்தின், இந்திய வாடிக்கையாளர் வணிக பிரிவு மேலாளர் மணீத் திவாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மகிழ்ச்சி
ஒன்றிய சிறு குறு தொழில் மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாராயண ரானே வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடெங்கிலும் உள்ள சிறு, குறு தொழிலகளை ஊக்குவிக்க அமேசான் நிறுவனம் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் 10 லட்சம் விற்பனையாளர்களில் 90% விழுக்காடு பேர் சிறு, குறு தொழில் முனைவோர் ஆவர்” என்று தெரிவித்துள்ளார்.
Metaverse’ல் நிலம் வாங்கி தியேட்டர் கட்டிய தயாரிப்பாளர்!
தொடர்ந்து, “மேட் இன் இந்தியா தயாரிப்பு பொருள்களை ஊக்குவிக்கவும், சிறு, குறு தொழில்துறையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்கவும், அவர்களுக்கான கட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுக்க ஒன்றிய அரசு கவனம் செலுத்தி வருகிறது. உள்நாட்டு பொருள் உற்பத்தியை அதிகரிக்கும் வண்ணம், அதற்கான மூலப் பொருட்கள், தொழில்நுட்பம், நிதி உதவி, திறன் பயிற்சிகள், பேக்கேஜிங் பயிற்சி, வியாபார உத்தி ஆகியவை குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அத்தகைய திசையை நோக்கி அமேசான் நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
110 நாள்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் புதிய ரீசார்ஜ் திட்டம்!