நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு இதுவரை ஒதுக்கப்படாமலுள்ள கட்சி சின்னங்களின் பட்டியலில் இருந்து இரண்டு சின்னங்கள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளதுடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.
குறித்த அறிவிப்பின் படி அந்த பட்டியலில் இருந்து கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.