எல்ஐசி (LIC) நிருவனத்தில் செப்டம்பர் 2021 வரையில் 21,539 கோடி ரூபாய் தொகையானது கேட்பாரற்று கிடப்பதாக தெரிய வந்துள்ளது.
இது எல்ஐசி நிறுவனம் பங்கு சந்தைக்கு ஐபிஓவுக்கு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில் வெளியாகியுள்ளது.
யாரும் உரிமை கோராத இந்த பெரும் நிதிக்கு வட்டியும் கிடைத்து வருகின்றது என்பது இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம்.
எல்ஐசி ஐபிஓ எப்போது..? பங்கு விலை என்ன..? மோடி அரசுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா..?
விரைவில் ஒப்புதல்
மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்கினை பொதுப் பங்கு வெளியீடு மூலம், மார்ச் மாத இறுதிக்குள் விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக அறிக்கையும் செபியிடம் தாக்கல் செய்துள்ள நிலையில் விரைவில் ஒப்புதல் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உரிமை கோரப்படாத நிதி
இவ்வாறு உரிமை கோரப்படாத நிதியானது கடந்த 2021ல் 18,495 கோடி ரூபாயாகவும், இதே 2020ல் மார்ச் மாத இறுதியில் 16,052 கோடி ரூபாயாகவும் இருந்தது. இதுவே கடந்த 2019ம் ஆண்டில் 13,843 கோடி ரூபாய் நிதியானது உரிமை கோரப்படாமல் இருந்தது.
யாருடைய பணம் இது?
இவ்வாறு யாரும் கேட்காமல் இருக்கும் இந்த உரிமை கோராப்படாத நிதியானது ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதெல்லாம் சரி இது யாருடைய தொகை? இந்த பணம் எல்லாம் எங்கே போகும். மற்ற விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம். இது முறையாக பாலிசி எடுத்து, பிறகு பிரீமியம் செலுத்தாமல் இருந்தவர்கள், பாலிசி தொகையை கட்டி முடித்த பிறகு பிரீமியம் செலுத்தாமல் பாலிசி காலாவதியாவது, சிலர் பாலிசி எடுத்ததும் தெரியாமல் பாலிதாரர் விவரங்களை பகிராமல் இருப்பது உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் தான் இந்த தொகையானது கேட்பாறின்றி உள்ளது.
தெரிந்து கொள்ளலாம்
ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனமும் 1,000 ரூபாய்க்கு மேல் உரிமை கோராமல் இருந்தால், அதன் விவரங்களை வெளியிடுவது அவசியான ஒன்றாகும். அதேபோல பாலிசிதாரர்களுக்கும் தங்களின் பாலிசி குறித்தும் கேட்பாறின்றி இருக்கும் தொகை குறித்து கேட்டு தெரிந்து கொள்ளவும் உரிமை உண்டு. இதற்கான வசதியும் இணையத்தில் உண்டு.
என்ன செய்வார்கள்?
அதெல்லாம் சரி இப்படி கேட்பாரற்று கிடக்கும் நிதியினை என்ன செய்வார்கள். ஒரு பாலிசியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணம் கேட்பாறின்றி கிடந்தால், அதனை முதியோர் நலனுக்கான மாற்றப்படலாம். இதற்காக முதியோர் நலன் சட்டம் என்ற பிரிவும் உள்ளது. ஆக இந்த 21,000 கோடி ரூபாய்க்கும் மேலான தொகையானது 10 ஆண்டுகள் கழித்து முதியோர் நலன் நிதிக்கு மாற்றப்படலாம்.
LIC has more than Rs,21,500 crore unclaimed funds
LIC has more than Rs,21,500 crore unclaimed funds/சும்மா கிடக்கும் ரூ.21500 கோடி பணம்.. எல்ஐசி-க்கு இது ஜாக்பாட் தானா..?