டெஸ்லாவுக்கு மீண்டும் கிடுக்குப்பிடி போட்ட அமெரிக்கா.. வசமாக சிக்கிய எலான் மஸ்க்..!

அமெரிக்காவின் வாகன பாதுகாப்பாளர்கள் டெஸ்லாவினை மீண்டும் தனது விசாரணை வலையத்திற்குள் கொண்டு வந்துள்ளது.

இந்த முறை இதற்கான வெளிப்படையான காரணங்கள் ஏதும் இன்றி, வாகனங்கள் நிறுத்தப்படலாம் என கூறப்படுகின்றது.

ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிய டெஸ்லாவின் மாடல் 3 மற்றும் Y கார் குறித்து தான் தற்போதும் பிரச்சனை எழுந்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் இந்த கார்கள் குறித்து 354 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

டெஸ்லா-வுக்கு மோடி அரசு கொடுக்கும் கடைசி ஆஃபர்.. எடுத்துக்கிட்டா நல்லது.. இல்லாடி கஷ்டம்..!

அதிகரிக்கும் புகார்கள்

அதிகரிக்கும் புகார்கள்

இதில் 2021 மற்றும் 2022 சேர்த்து 4,16,000 வாகனங்களை உள்ளடக்கியது. இதில் எந்த விபத்துகளோ அல்லது காயங்களோ இல்லையாம். எனினும் மேற்கண்ட புகார்களில் பெரும்பாலும் பிரேக் பற்றிய புகார்களே அதிகம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு வழி தனிப்பாதையில் பின் பக்க விபத்துக்கு வாகன உரிமையாளர்கள் பயப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆட்டோபைலட் குறித்து சந்தேகம்

ஆட்டோபைலட் குறித்து சந்தேகம்

இதற்கிடையில் ஆட்டோபைலட் எனப்படும் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும், தொழில் நுட்பம் குறித்தும் சந்தேகம் வலுத்துள்ளது. இது டெஸ்லா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது எனலாம். உலகின் மிகப்பெரிய மின்சார கார் பிராண்டாக இருந்து வரும் டெஸ்லாவில், தொடர்ந்து இது போன்ற சச்சைகள் வெடித்து வருவது வாடிக்கையாகி வருகின்றது.

4 லட்சம் வாகனங்களின் எதிர்காலம்
 

4 லட்சம் வாகனங்களின் எதிர்காலம்

அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைக்கு மத்தியில் டெஸ்லாவின் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

இந்த வாகனங்கள் மீண்டும் திரும்பப் பெறப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது.

காத்திருக்கும் சவால்கள்

காத்திருக்கும் சவால்கள்

நவம்பரில் டெஸ்லா 2017 முதல் டெஸ்லா கிட்டதட்ட 12,000 வாகனங்களை திரும்ப பெற்றுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு தான் டெஸ்லா நிறுவனம் 2021ல் விற்பனை 109% அதிகரித்துள்ளது. இது சர்வதேச அளவில் சந்தையில் 14% அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் குளோபல் கார் சந்தையில் 4% வளர்ச்சி அதிகரித்துள்ளது. இது கொரோனா மத்தியிலும் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் டெஸ்லா மீதான இந்த புகார்கள் எதிரொலிக்குமா? விற்பனையில் பாதிப்பினை ஏற்படுத்துமா? எலான் மஸ்கிற்கு காத்திருக்கும் சவால்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tesla டெஸ்லா

English summary

tesla probes more than 4 lakh vehicles over unexpected braking

tesla probes more than 4 lakh vehicles over unexpected braking/டெஸ்லாவுக்கு மீண்டும் கிடுக்குப்பிடி போட்ட அமெரிக்கா.. வசமாக சிக்கிய எலான் மஸ்க்..!

Story first published: Thursday, February 17, 2022, 20:41 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.