தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் அரசியல் கட்சிகள் பலவும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
பல்வேறு உத்திகளை கையாண்டு நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அயல் நாட்டவர் ஒருவர் தமிழ்நாடு தேர்தல் களத்தில் தமிழக கட்சி ஒன்றுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
ருமேனியா நாட்டை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் பிசினஸ் விசாவில் தமிழகத்திற்கு வந்துள்ளார். இங்கு பேருந்தில் பயணம் செய்த பொழுது பெண்களுக்கு கட்டணமில்லாத பேருந்து பயண திட்டம் இருப்பதை தெரிந்து கொண்ட அவர் மிகவும் ஆச்சர்யமடைந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாக அவர் கோவை பகுதிகளில் புல்லட்டில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். வெளிநாட்டவர் ஒருவர் அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிட உரிமையற்றவர்.
இவர் தமிழக அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது சட்டப்படி குற்றமாகும். எனவே ஸ்டெபன் செயலை கண்டித்து FRRO Cum Civil authority சார்பில் தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.