குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை: முதல்வரின் பெயரால் முறைகேடு நடத்த அனுமதிக்கக்கூடாது என்று, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் சார்பில் குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை; பயனாளிகள் தேர்வுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்படவில்லை; விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாமகவின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் அ கணேஷ்குமார் இந்த பொய்யான விண்ணப்பம் குறித்து பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில், “இந்த விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டு நீங்கள் கொடுத்தால்தான், அரசாங்கம் அந்த திட்டத்தில் உங்களைக் எடுத்துக்கொள்ளும், அப்போதுதான் உங்கள் வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் வந்து சேரும்., திமுகவுக்கு வாக்களித்தால் தான் உங்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று மக்களை ஏமாற்றுகின்ற வேலையை திமுகவினர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதனையெல்லாம் மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. ஏன் என்றால், மக்களே இந்த விண்ணப்பத்தை என்னிடம் கொடுத்து, ‘பாருங்கள் அண்ணா., திமுகவினர் எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள்’ என்று தெரிவிக்கின்றனர்.
இந்த விண்ணப்பத்தில் அரசாங்கம் முத்திரையை, அரசாங்கத்தின் பெயரோ எதுவுமே இல்லை. இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை. மக்களை ஏமாற்றும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இதை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் இதனை எல்லாம் நம்பாமல் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருக்கிறார்கள்” என்று அ கணேஷ்குமார் தெரிவித்துள்ளார்.