சென்னை: நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சர் ஜித்தேந்தர சிங் எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ளார். இத்திட்டத்துக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
இத்திட்டம் செயல்படுத்தப்படும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட `சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு`, மக்களின் வாழ்வாதாரமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படாது என்று பரிந்துரைத்துள்ளது. இதனை தொடர்ந்து இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் முழுக்க அறிவியல் சம்பந்தப்பட்டது என்பதாலும், இதனால் அந்த பகுதி மற்றும் மலை கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது தொடர்பாக கடந்த 10 அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்,
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ”மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழலைப் காப்பதே முக்கியமானது. அதனால், நியூட்ரினோ திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் நடவடிக்கை, கடந்த பத்தாண்டுகளாக மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. நன்றி – பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் டிவிட் பதிவிட்டுள்ளார்.