நேரு உருவாக்கிய இந்தியாவின் இன்றைய நிலை.. சிங்கப்பூர் பிரதமர் பரபரப்பு பேச்சு

சிங்கப்பூர்
நாடாளுமன்றத்தில் பேசிய அந்த நாட்டு பிரதமர் லீ சியன் லூங், மறைந்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவை புகழ்ந்து பேசியுள்ளார். நேரு உருவாக்கிய இந்தியாவில் இன்று “கிரிமினல்” வழக்குகளை சுமப்போர்தான் பாதிக்கும் மேல் எம்.பிக்களாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஜவஹர்லால் நேருவை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர் சிலர். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நேருவைப் பற்றி ஏதாவது பேசுவதே இவர்களின் வாடிக்கையாகவும் மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சி இதைத் தொடர்ந்து கண்டித்து வருகிறது.

இந்த நிலையில் நேருவுக்கு பெரும் புகழாரம் சூட்டிப் பேசியுள்ளார் சிங்கப்பூர் பிரதமர். 70 வயதான சிங்கப்பூர் பிரதமர்
லீ லூங்
அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பேசும்போது ஜனநாயகம் குறித்துப் பேசினார். அப்போதுதான் நேருவை அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ஜனநாயகம் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மோடி அரசு தோற்றுப் போய் விட்டது.. மன்மோகன் சிங் கடும் தாக்கு

உயர்ந்த கொள்கைகளாலும், அரிய மதிப்புகளின் அடிப்படையிலும்தான் பல நாடுகள் உருவாகின, உருவாக்கப்பட்டன அல்லது நடை போடத் தொடங்கின. ஆனால் உயர்ந்த தலைவர்கள் இருந்த நாடுகளில் காலப் போக்கில் அந்தத் தலைவர்களின் வழி நடப்பவர்கள் குறைந்து போய் விடுகிறார்கள். நாடுகளும் மாறிப் போய் விடுகின்றன.

மிகுந்த கொள்கைப் பிடிப்புடன்தான் எல்லாம் ஆரம்பிக்கிறது. நாட்டின் விடுதலைக்காக, தீரத்துடன் போராடி வெற்றி பெற்ற தலைவர்கள், அந்த சுதந்திரத்தையும், கலாச்சாரத்தையும் காக்க மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றனர். தீயிலிருந்து புடம் போட்ட தங்கங்களாய் அவர்கள் உருவாகிறார்கள். தலைவர்களாக, நாடுகளாக அவர்கள் உருவாகிறார்கள். டேவிட் பென் குரியன் போல,
ஜவஹர்லால் நேரு
போல, ஏன் சிங்கப்பூரிலேயே பல தலைவர்கள் நம்மிடம் உள்ளனர்.

நாட்டு மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இவர்கள் உழைக்கிறார்கள், பாடுபடுகிறார்கள். மக்களின் சிறந்த எதிர்காலத்தை இவர்கள் நிர்ணயிக்கிறார்கள். ஆனால் இந்த தலைவர்கள் காட்டிய வழியை, அவர்களுக்குப் பின்னால் வரும் தலைமுறையினர் மறந்து போய் விடுகிறார்கள் அல்லது அதைக் கடைப்பிடிக்க தவறுகிறார்கள்.

நாட்டுக்காக உயிர் நீத்த என் குடும்பத்தினர்.. கேலி செய்கிறது பாஜக.. பிரியங்கா குமுறல்

அரசியலின் தன்மை மாறி விட்டது. தலைவர்களை மதிப்பது குறைந்து விட்டது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எப்படியும் அரசியல் செய்யலாம் என்று நினைத்து விடுகிறார்கள். அரசியல்வாதிகளிடமிருந்து மக்கள் எந்த எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்வதில்லை. காரணம், இதுதான் கிடைக்கும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். எனவே தரம் குறைந்து விடுகிறது. நம்பிக்கை அடிபட்டுப் போய் விடுகிறது. நாடும் வீழ்ச்சி அடைந்து விடுகிறது.

நாட்டை உருவாக்கியவர்கள் ஏற்படுத்தி வைத்த தரத்தை இப்போது பல நாடுகளில் நாம் காண முடிவதில்லை. ஜவஹர்லால் நேரு உருவாக்கிய நாட்டில் இன்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களில் பாதிப் பேருக்கு மேல் கிரிமினல் வழக்குகளை சுமந்து கொண்டுள்ளவர்களாக இருக்கிறார்கள். பாலியல் வன்புணர்வு, கொலை என கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். இவற்றில் பல அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறப்பட்டாலும் கூட இவர்கள் வழக்குகளுடன் இருக்கிறார்கள் என்றார் லீ லூங்.

நேரு குறித்துப் புகழாரம் சூட்டிய லீ லூங், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்துக் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.